Thursday, May 20, 2021

ஏன் தரையில் கைகளை ஊன்றி சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

 உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, உண்ணும் போது மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவாக சாப்பிடும் போது, இப்படி தான் சாப்பிட வேண்டுமென்ற விதிமுறைகளை நம் முன்னோர்கள் கொண்டிருப்பார்கள். இந்த விதிமுறைகளை நாமும் தவறாமல் பின்பற்றி வருவோம்.

இந்த விதிமுறைகள் ஒவ்வொன்றிற்கும் பின்னணியில் காரணங்கள் நிச்சயம் ஒளிந்து கொண்டிருக்கின்றன. எந்த ஒரு காரணமும் இல்லாமல் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு என்று விதிமுறைகளை விதித்திருக்கமாட்டார்கள். இன்றைய காலத்தில் பலரும் நாம் பின்பற்றும் பழக்கங்களுக்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளார்கள். அதில் சாப்பிடும் போது மேற்கொள்ளக்கூடாத சில பழக்கங்களுக்கான காரணங்கள் குறிப்பிடத்தக்கவை.

இக்கட்டுரையில் ஒருவர் சாப்பிடும் போது மேற்கொள்ளக்கூடாத சில பழக்கங்களும், மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

#1

சாப்பிடும் போது தண்ணீரை அதிகம் குடிக்கக்கூடாது என்று கூறுவார்கள். அப்படி குடித்தால், தாகத்திற்கு சிறிது குடிக்கலாம். அதிகம் குடித்தால் உணவை செரிக்க உதவும் அமிலத்தின் திறன் குறைந்து, உணவுகள் சரியாக செரிமானமாகாமல் போகும். வேண்டுமானால் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் மற்றும் உணவு உட்கொண்ட 30 நிமிடத்திற்கு பின் வேண்டிய அளவு தண்ணீரைக் குடிக்கலாம்.

#2

உணவை உட்கொள்ளும் போது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ, மொபைல் போன் அல்லது டிவி ரிமோட்டைப் பயன்படுத்திக் கொண்டோ சாப்பிடக்கூடாது. இதனால் உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த முடியாமல் போவதோடு, அவைகளில் ஏராளமான கிருமிகளும் இருக்கும். இதனால் உடல் உபாதைகளுக்கு உள்ளாகக்கூடும்.


#3

சாப்பிடும் போது புத்தகங்களைப் படித்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் எவ்வளவு உணவு உட்கொண்டோம் என்பது தெரியாமல் போவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடும். இதன் விளைவாக உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

#4

சாப்பிடும் போது நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் தவறான நிலையில் அமர்ந்து உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இதனால் உண்ணும் உணவுகள் வேகமாக செரிமானமாகிவிடும். இதன் விளைவாக அதிகமாக சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

#5

முக்கியமாக சாப்பிடும் போது கைகளை தரையில் ஊன்றி சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் உண்ணும் உணவு உடலில் ஒட்டாது என்று கூறுவார்கள். இதற்கு காரணம் சாப்பிடும் போது கைகளை ஊன்றி சாப்பிடும் போது, வயிறு சுருங்கி விரைவில் வயிறு நிரம்பியது போன்று இருக்கும். ஆனால் விரைவில் பசி எடுத்துவிடும். இதன் விளைவாக உடல் பருமன் அடையக்கூடும்.


#6

உணவு உட்கொள்ளும் போது கண்ட விஷயங்களை நினைத்துக் கொண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் எவ்வளவு உணவு உட்கொள்கிறோம் என்பது தெரியாமல் அதிகளவு உணவை உட்கொள்ள நேர்ந்து, அதுவே உடல் எடை அதிகரிக்க வழிவகுத்துவிடும்.

சாப்பிடும் போது மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்கள்!

#1

நம் முன்னோர்கள் தரையில் அமர்ந்து கால்களை மடக்கி உட்கொள்வதே நல்லது என்று கூறுவார்கள். இதற்கு காரணம் உணவை உட்கொள்ளும் போது கால்களை மடக்கி, தரையில் அமர்ந்து உட்கொள்வதால், உணவுகள் முறையாக இரைப்பையை அடைந்து சரியாக செரிமானமாகும்.

#2

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உணவை உட்கொள்ளும் போது, சிறிய அளவிலான தட்டைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வளவு உணவு உட்கொள்கிறோம் என்பது நன்கு தெரியும். இதைக் கொண்டு உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

#3

உணவை உண்ணும் போது அவசர அவசரமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக மெதுவாக நன்கு மென்று விழுங்க வேண்டும். இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாகிவிடும் மற்றும் உணவில் உள்ள அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதை விட்டு வேகமாக சாப்பிட்டால், காற்றை சேர்த்து விழுங்கி, வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும்.

#4

காலை உணவை எழுந்த ஒரு மணிநேரத்திற்குள்ளேயே சாப்பிட வேண்டும். ஒரு நாளில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது இரவு நேரத்திற்கும்-காலை நேரத்திற்கும் இடையிலான வேளையில் தான். அதேப் போல் இரவு நேரத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும்.

வாகனத்தின் டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன?

 டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கின்றன என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? இது தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.


Wednesday, February 17, 2021

டைனோசர்கள் அழிய குறுங்கோள் காரணம் அல்ல! - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

 பூமியில் பலகோடி ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த டைனோசர்கள் அழிந்தது குறித்து ஹாவர்டு ஆய்வாளர்கள் புதிய கருத்தை முன்வைத்துள்ளனர்.

Saturday, June 1, 2019

6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS

6TH STD SCIENCE:

Text book t/m - PDF version - Direct Download link.
Text book e/m - PDF version - Direct Download link.
  • 6ம் வகுப்பு பருவம் - 1 அலகு-1 அறிவியல்  ஆசிரியர் பாடக் குறிப்பேடு  ஜீன் 1 வது வாரம் - Click here
  • 6ம் வகுப்பு பருவம் - 1 அலகு-1 அறிவியல்  ஆசிரியர் பாடக் குறிப்பேடு ஜீன் 2 வது வாரம்- Click here

Sunday, May 5, 2019

NEET EXAM ORIGINAL QUESTION PAPER AND ANS KEY (05.05.2019)

NEET EXAM QUESTION PAPER & ANS KEY - 2019 :

NEET Answer Key Code wise P1/Q2/R3/S4

Resonance NEET 2019 answer key code P2Click Here
Resonance NEET 2019 answer key code Q2Click Here
Resonance NEET 2019 answer key code R2Click Here
Resonance NEET 2019 answer key code R3Click Here
Resonance NEET 2019 answer key code S3Click Here
another code questions update shortly wait .....
இணைந்திருங்கள் கல்வி அமுது உடன்

Friday, April 26, 2019

NEET STUDY MATERIALS ENGLISH MEDIUM PHYSICS, CHEMISTRY, BIOLOGY

    NEET STUDY MATERIALS ENGLISH MEDIUM
  1. AMMA NEET STUDY MATERIALS
  2. NEET 2019 - BIOLOGY - CHAPTER 1 THE LIVING WORLD
  3. NEET 2019 - BIOLOGY - CHAPTER 2 BIOLOGICAL CLASSIFICATION
  4. NEET 2019 - BIOLOGY - CHAPTER 3 PLANT KINGDOM

NEET TEXT BOOKS DOWNLOAD

    NEET TEXT BOOKS DOWNLOAD
  1. TEXT BOOKS NCERT CLASS 11 PHYSICS I II.pdf
  2. TEXT BOOKS NCERT CLASS 12 PHYSICS I II.pdf
  3. TEXT BOOKS NCERT CLASS 11 PHYSICS LAB.pdf
  4. TEXT BOOKS NCERT CLASS 11 PHYSICS PROBLEM.pdf

NEET STUDY MATERIALS BIOLOGY TAMIL MEDIUM

  1. NEET உயிரியல் (Biology) அலகு – 1 பல்லுயிர்த்தன்மை - 1.1. உயிரியல் வகைப்பாடு
  2. NEET உயிரியல் (Biology) அலகு – 1 பல்லுயிர்த்தன்மை - 1.2. தாவர வகைப்பாடு

NEET STUDY MATERIALS CHEMISTRY TAMIL MEDIUM

  1. NEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 1. வேதியியலின் அடிப்படைக் கொள்கைகள்
  2. NEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 2. அணு அமைப்பு
  3. NEET வேதியியல் (Chemistry) தொகுதி-1 - 3. தனிமங்களை வகைப்படுத்துதல் (ம) ஆவர்த்தன பண்புகள்

NEET STUDY MATERIALS - PHYSICS TAMIL MEDIUM

    NEET STUDY MATERIALS TAMIL MEDIUM
  1. NEET இயற்பியல்  (Physics) தொகுதி-1 - 1. இயல் உலகம் மற்றும் அளவீட்டியல்
  2. NEET இயற்பியல்  (Physics) தொகுதி-1 - 2. இயக்கவியல்
  3. NEET இயற்பியல்  (Physics) தொகுதி-1 - 3. இயக்க விதிகள்

Monday, December 24, 2018

9TH STD ALL TERM VIDEO COLLECTION

9TH STD VIDEO : 
  1. குழியாடி கதிர்படம் விளக்கம் - VIDEO
  2. குவியாடி கதிர்படம் விளக்கம் - VIDEO
  3. 9th STD SCIENCE- WHAT SIZE OF MIRROR IS REQUIRED TO SHOW ENTIRE 
  4. குவி லென்ஸ் கதிர்படம் விளக்கம்- VIDEO
  5. குழி லென்ஸ் கதிர்படம் விளக்கம் - VIDEO
  6. வேகம், திசைவேகம், முடுக்கம் - VIDEO
  7. இயக்க சமன்பாடுகள் எளிய விளக்கம் -VIDEO
  8. DERIVATION FOR FAHRENHEIT TO CELCIUS CONVERSION FORMULA - VIDEO
  9. VERNIER CALIPER WORKING PRINCIPLE - VIDEO
  10. 10 USEFUL EXCEL FORMULA FOR TEACHERS - VIDEO TUTORIAL
  11. இயக்க வகைகள் பற்றிய VIDEO
  12. தன் வெப்ப ஏற்புத்திறன், உள்ளுறை வெப்பம் பற்றிய VIDEO
  13. 6TH STD TERM -3 SCIENCE UNIT -1 MAGNETISM : காந்தம் கண்டுபிடிக்கப்பட்ட கதை (வீடியோ வடிவில் எளிய விதத்தில்)
  14. ஒன்பதாம் வகுப்பு-அறிவியல்- மூன்றாம் பருவம்-3.அலகு - 3 : அண்டம்-வீடியோ

ஏன் தரையில் கைகளை ஊன்றி சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

  உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, உண்ணும் போது மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கை வகிக்கிறது. பொதுவா...